விஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காமெடி நடிகர் யோகி பாபு சர்ச்சையை கிளப்பியும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தளபதி விஜய் ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் நடிகர் விஜய் ‘சர்கார்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது 63வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை விஜய்யின் தொடர் வெற்றிப்பட இயக்குனரான அட்லீ இயக்க ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் காமெடி நடிகர்களாக நடிக்க பரியேறும் பெருமாள் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அண்மையில் யோகி பாபு மற்றும் கதிர் கால்பந்து சீருடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை நடிகர் கதிர் வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தளபதி 63 யில் கதிர் மற்றும் யோகி பாபுவின் கெட்டப் கசிந்துவிட்டது என கூற தொடங்கினர்.

ஆனால், உண்மையில் அது தளபதி 63 படத்தின் புகைப்படம் இல்லையாம் , நடிகர் கதிர் நடிப்பில் உருவாகிவரும் “ஜடா” என்ற படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கபட்ட புகைப்படம் என தற்போது தெரியவந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்ததோடு பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

About அருள்

Check Also

விஜய்யை

விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது! தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு …