யோகிபாபுவுக்கு தங்கையா யாஷிகா
யோகிபாபு , யாஷிகா

யோகிபாபுவுக்கு தங்கையா யாஷிகா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காமெடி நடிகராக இருந்து வரும் யோகிபாபு, ஹீரோவாக புரமோஷன் ஆகும் படம் ‘ஜாம்பி’.

இந்த படத்தின் கதை இரவில் தொடங்கி காலையில் முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

யோகிபாபுவின் நண்பர்கள் மூவர் மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பேய்பங்களாவில் மாட்டிக்கொள்ள அவரை காப்பாற்ற செல்லும் யோகிபாபுவும் அந்த பங்களாவில் சிக்குகிறார்.

அதன் பின்னர் யோகிபாபு உள்ளிட்ட நால்வரையும் யாஷிகா எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் கிளைமாக்ஸில் யாஷிகா கேரக்டரில் ஒரு ரகசியமும் ஒளிந்துள்ளதாம்

இந்த நிலையில் இந்த படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக யாஷிகா நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் தங்கையாக நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து பேட்டி அளித்த இந்த படத்தின் இயக்குனர் புவன்நல்லான்,

யோகிபாபுவுக்கு யாஷிகா ஜோடியும் இல்லை, தங்கையும் இல்லை, இது வேற மாதிரியான ஒரு புனிதமான உறவு,

அது என்ன உறவு என்பதை படம் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்’ என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

யோகிபாபு, யாஷிகா, மனோபாலா, கோபி, சுதாகர், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

எஸ்3 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளது

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …