நாமினேஷன்

நாமினேஷன் படலம் தொடங்கியது! அதிர்ச்சிக்குரிய வனிதாவின் தேர்வு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபரை வெளியேற்ற நாமினேஷன் படலம் தொடங்கும். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படவில்லை.

ஆனால் இந்த வாரம் ஒரு நபரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் இன்று தொடங்கியது என்பது சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

இன்றைய நாமினேஷன் படலத்தில் கடைசியாக களமிறங்கிய மீராமிது, எதிர்பார்த்தது போலவே அபிராமியையும், சாக்சியையும் நாமினேஷன் செய்தார்.

அதேபோல் அபிராமி, மதுமிதாவை நாமினேஷன் செய்ய,
மதுமிதாவையும் மீராமிதுனையும் சாக்சி நாமினேஷன் செய்தார்.

மேலும் கவின், சரவணன் ஆகிய இருவரை பாத்திமா பாபுவும், வனிதா சேரனையும் நாமினேஷன் செய்தனர். சேரன் தனது சகோதரர் போல், அப்பா போல் என்று நேற்று கூறிய வனிதா இன்று அவரையே நாமினேஷன் செய்தது தான் இன்றைய புரமோவின் மிகப்பெரிய டுவிஸ்ட் ஆகும்.

இந்த வார நாமினேஷன் படலத்தில் சிக்கியவர்களில் யார் வெளியேற போகின்றார்கள் என்பது மக்களின் ஓட்டுக்களில் தான் உள்ளது

https://www.facebook.com/VijayTelevision/videos/2259936384336334/

தூக்கிலிடப்படுபவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியீடு

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …