பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரஜினியை வெளியேற்றியது யார்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து கொண்டிருக்கின்றனர்.

இதுவரை பாத்திமா பாபு, லாஸ்லியா, மதுமிதா, சாக்சி அகர்வால், கவின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டினுள் உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் தொடங்குவதற்கு ஒருவாரம் முன்னதாகவே பத்திரிகையாளர்களுக்காக பிக்பாஸ் வீடு திறக்கப்பட்டது.

அப்போது சென்று வந்த பத்திரிகையாளர்கள் பலர் ஒருபக்கம் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ பட ஓவியமும், இன்னொரு பக்கம் ரஜினியின் பேட்ட படத்தின் ஓவியமும் இருப்பதை குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் இன்று பிக்பாஸ் வீட்டை பார்த்தபோது ரஜினியின் ஓவியம் இல்லை. அந்த ஓவியம் அகற்றப்பட்டிருந்தது.

இதில் கமல்ஹாசனின் தலையீடு இருந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது

இந்த நிலையில் ஒரு பத்திரிகையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கடந்த வாரம் நான் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றபோது ரஜினியின் ஓவியம் இருந்தது.

ஆனால் அந்த ஓவியம் இன்று காணவில்லை?

என்ன நடந்தது விஜய்டிவி? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நிச்சயம் இதற்கு விஜய் டிவியின் தரப்பில் இருந்தும் கமல் தரப்பில் இருந்தும் பதில் வரப்போவதில்லை.

ரஜினியின் ஓவியம் அங்கு இருந்தால் ரஜினி குறித்த பேச்சே அதிகம் இருக்கும், நாம் இருட்டடிப்பு செய்யப்படுவோம் என்ற பயத்தால் கூட கமல் அந்த ஓவியத்தை அகற்ற சொல்லியிருக்கலாம் என்று கூறப்படுகிறது

தொடங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி! முதல் போட்டியாளர் யார் தெரியுமா?

தமிழ்நாட்டு சிக்கல்களை எடுத்துரைக்கும் பிக்பாஸ் வீடு

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …