ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

என் வீட்டில் தாராளமாக ரெய்டு செய்யலாம்: ப.சிதம்பரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களின் இல்லங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன,
இந்த நிலையில் இந்த ரெய்டு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘என்னுடைய சென்னை மற்றும் சிவகெங்கை வீட்டிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக எனக்கு தகவல்கள் வந்திருக்கின்றன.

வருமான வரித்துறையினர் தாராளமாக என் வீட்டில் சோதனை செய்யலாம். அவர்களுக்கு எந்தவித முறைகேடான ஆதாரங்களும் கிடைக்க போவதில்லை

நாங்கள் எங்கள் வீட்டில் எதையும் மறைத்து வைக்கவில்லை என்பது வருமான வரித்துறையினர்களுக்கு ஏற்கனவே தெரியும்.

இதற்கு முன் நடந்த ரெய்டில் எந்த ஆவணமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதற்காக அவர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

About அருள்

Check Also

திமுக

அடிச்சு தூக்கிய திமுக வாரிசுகள்: வெற்றி கோட்டையான சென்னை!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesதிமுக வாரிசுகள் மக்களவை தேர்தலில் சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளது. தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், …