நடிகை வரலட்சுமி
நடிகை வரலட்சுமி

மார்பகம் பற்றி பேச கூச்சப்படாதீர்கள் – நடிகை வரலட்சுமி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உடலின் ஓர் அங்கம் தான் மார்பகம் அதனை கூச்சப்படாமல் தாய், சகோதரியிடம் வெளிப்படுத்தி சிகிச்சை பெறுங்கள், கூச்சபட வேண்டாம் என்று வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலைய வளாகத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கருத்துகளை கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வரலட்சுமி சரத்குமார், “மார்பகம் உடலின் ஓர் அங்கம் தான். அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கூச்சப்படாமல் தாய், மற்றும் சகோதரியிடம் வெளிப்படையாக பேச வேண்டும். மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். புற்று நோய் குணப்படுத்த கூடிய நோய் தான்” என்றார்.

மேலும் பேசிய அவர், நாம் மார்பகம் என்றாலே அதைப் பற்றி பேசக் கூடாது என்ற மன நிலையுடன் இருந்து வந்துள்ளோம். ஆண்களுக்கு எப்படி உடலில் சில பாகங்கள் இருக்கிறதோ, அதே போல் பெண்களுக்கு மார்பகம் என்பது உடலின் ஓர் அங்கம் தான் என்று கூறினார்.

இன்றைய ராசிப்பலன் 01 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …