வனிதா செய்த இரண்டு கொலைகள்

வனிதா செய்த இரண்டு கொலைகள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கில் வனிதாவும், முகினும் கொலையாளியாக யாருக்கும் தெரியாமல் நடித்து வருகின்றனர்.

பிக்பாஸ் கொடுத்த இரண்டு கொலைகளை இருவரும் திட்டமிட்டு சரியாக நடத்திவிட்டனர்.

முதல் கொலை சாக்சியின் மேக்கப்பை அவர் கையாலே கலைக்க வைக்க வேண்டும் என்பதும், இரண்டாவது கொலை மோகன் வைத்யாவை மைக்கேல் ஜாக்சன் போல் ஆட வைக்க வேண்டும் என்பதுதான்.

இரண்டையும் வனிதாவும், முகினும் சரியாக செய்து முடித்துவிட்டு பிக்பாஸ் பாராட்டையும் பெற்றுவிட்டனர்.

இந்த டாஸ்க் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இன்றும் வனிதா வெற்றிகரமாக பிக்பாஸ் நடத்த சொல்லும் கொலைகளை முடித்துவிடுவார்.

இது லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்காக இருந்தாலும், கொலைகளை சரியாக நடத்தியதால் வனிதா சேஃப் என அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே மக்கள் வனிதா வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என வாக்குகள் அளித்தாலும் பிக்பாஸ் அவரை காப்பாற்றிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதுபோல் ஐஸ்வர்யாவையும் யாஷிகாவையும் பலமுறை பிக்பாஸ் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …