மனித உரிமை

கன்பெக்ஷன் ரூம்முக்கு சென்று வந்ததும் வாய் ஓய்ந்த வனிதா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் 11ஆம் நாளில் இதுவரை நடந்தது என சில விஷயங்களை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதாவது 10ஆம் நாளில் நடந்த சம்பவங்கள் சில, இதில் சேரனுக்கு வனிதாவுக்கும் அறைகளை சுத்தம் செய்வதில் சில பிரச்சனைகள் வருகிறது.

இதற்கு இடயே அவ்வப்போது மோகன் வைத்யா நான்தான் கேப்டன் என்பதை அவ்வபோது நினைவுபடுத்துகிறார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க, சேரன் கைப்பேசி இருப்பதாக நினைத்துக்கொண்டு, கையை காதருகே வைத்து கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் நலம் விசாரிக்கிறார்.

இது அனைவருக்கும் வியப்பையும், அதிர்ச்சியும் தருகிறது.

ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் தொலைப்பேசி உபயோகிக்க கூடாது என்பதால், அவரின் ஏக்கத்தை அவ்வாறு வெளிப்படுத்தினார்.

எப்போதும் போல கவின், சாக்‌ஷி, லாஸ்லியா உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். மறுநாள் காலை எப்பவும் போல காலை பாடல் ஒலிக்கிறது.

தினம் ஒரு டாஸ்க் கொடுப்பது வழக்கம். அதேபோல அந்த டாஸ்க் பாத்திமா பாபுவுக்கு கொடுக்கப்படுகிறது.

அதில் ஒரு செய்தி தொகுப்பாளர் எவ்வாறு செய்திகளை தொகுத்து வழங்குவார் என்பதை வீட்டில் உள்ளவர்களுக்கு கற்று கொடுக்க கொடுக்கிறார்.

இதையே அனைவருகும் படித்தும் காட்டுகின்றனர்.

பிக்பாஸ் வனிதாவை கன்பெக்‌ஷன் ரூம்முக்கு வரச் சொல்கிறார்.

அங்கே சென்று வந்ததும் நடந்த விஷயங்களை ரேஷ்மாவிடம் ஷேர் செய்கிறார்.

அது வனிதாவின் கேஸ் சம்மந்தமாக தெலுகானா போலீஸ் வந்துள்ளதாகவும், அதை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகவும் கூறுகிறார்.

எப்பவும் போல ஒரு டாஸ்ட் அன்னப்பறவை டீம்முக்கு கொடுக்கப்படுகிறது. அதை மதுமிதாவும், சாண்டியும் செய்கின்றனர்.

அதில் மணல் நிறைந்த சேற்றில் இறங்கி அதில் போடப்பட்டுள்ள coin-களை எடுக்கவேண்டும். இதை ஒரு வழியாக வெற்றிகரமாக முடிக்கின்றனர் சாண்டியும், மதுமிதாவும்.

கவின் எப்பவும் யாரிடாமாவது கடலை போடுவது வழக்கம். இப்போது லாஸ்லியாவிடம் அதை செய்கிறார்.

கவின்

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்களுக்கு மட்டும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது.

அதில் கவின் ஷெரினோட ஷாட்டான ஆடையை அணிந்து கொண்டு அவர் பண்ற அலப்பறை தாங்க முடியல.

போட்டிகிட்டு இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து ஷெரின், அபிராமி, சாக்‌ஷி சிரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

பிறகு பிக்பாஸ் ஆண் போட்டியாளர்கள் பெண்களின் ஆடை மற்றும் அதே போல ஒப்பனைகளை செய்துக்கொண்டு, வாட்டர் பாட்டிலை வைத்துக் கொண்டு குழந்தை விஷயத்தில் நடந்தவற்றை வைத்து காமெடி செய்கின்றனர்.

இதனை பார்த்து கொண்டிருக்கும் பெண் போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

இந்த டாஸ்கின் முடிவில் தர்ஷன் தான் வின்னர் என முடிவெடுத்து சேரன் அதற்கு பரிசும் வழங்குகின்றார்.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …