இன்றைய பஞ்சாங்கம்
27-04-2019, சித்திரை 14, சனிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 05.01 வரை பின்பு தேய்பிறை நவமி.
திருவோணம் நட்சத்திரம் இரவு 02.12 வரை பின்பு அவிட்டம்.
நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஹயக்ரீவர் – கால பைரவர் வழிபாடு நல்லது.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் – 27.04.2019
மேஷம்
இன்று பிள்ளைகள் வழியில் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.
நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும்.
உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் நீங்கும்.
ஆன்மீக காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
ரிஷபம்
இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.
குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்.
மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
தொழிலில் இருந்த தேக்க நிலை பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் மாறும்.
சுபகாரியங்கள் கைகூடும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம்.
தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.
பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள்.
உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும்.
தேவைகள் பூர்த்தியாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும்.
திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம்.
தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும்.
நண்பர்களின் உதவியால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
துலாம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.
இதுவரை இருந்த குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.
உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.
சுப காரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.
விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.
தனுசு
இன்று உறவினர்கள் வருகையால் மனநிம்மதி குறையலாம்.
கொடுத்த கடன் பெறுவதில் தாமதம் உண்டாகும்.
தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும்.
உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும்.
எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மகரம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும்.
கும்பம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும்.
சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம்.
புதிய பொருட்களை வாங்கும் போது கவனமாக இருப்பது நல்லது.
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
உற்றார் உறவினர்களுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறையும்.
அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.
சேமிப்பு உயரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
359 பேர் அல்ல … 253 பேர் – தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பற்றி இலங்கை அரசு புதுத் தகவல் !