இன்றைய ராசிப்பலன்
இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 02 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்றைய பஞ்சாங்கம்
02-06-2019, வைகாசி 19, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 04.40 வரை பின்பு அமாவாசை.
கிருத்திகை நட்சத்திரம் இரவு 12.38 வரை பின்பு ரோகிணி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 0. கிருத்திகை.
முருக வழிபாடு நல்லது. போதாயண அமாவாசை.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும்.
பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும்.
நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
வியாபார ரீதியான பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.
விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
வருமானம் பெருகும்.

மிதுனம்
இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும்.
பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும்.
சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
குடும்பத்தில் பெண்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.

கடகம்
இன்று நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும்.
பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள்.
திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.
நினைத்த காரியம் நிறைவேறும்.

சிம்மம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும்.
பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வராத கடன்கள் வசூலாகும்.
சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

கன்னி
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும்.
பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள்.
நண்பர்களோடு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
பணவரவு தாராளமாக இருக்கும்.
புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
சேமிப்பு உயரும்.

துலாம்
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும்.
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது.
சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

விருச்சிகம்
இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.
புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள்.
வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும்.
தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.
தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மகரம்
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள்.
திடீர் பணவரவு உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்
இன்று மருத்துவ செலவுகள் ஏற்படும்.
வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.
பணப் பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமாக செயல்படுவது நல்லது.
கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதியை தரும்.

மீனம்
இன்று பொருளாதார நெருக்கடிகள் குறைந்து குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் நீங்கும்.
வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கி அனுகூலமான பலன் கிடைக்கும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001

About அருள்

Check Also

Today Rasi Palan 27.03.2020 | இன்றைய ராசிபலன் 27.03.2020

Today Rasi Palan 27.03.2020 | இன்றைய ராசிபலன் 27.03.2020

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!Today Rasi Palan 27.03.2020 | இன்றைய ராசிபலன் 27.03.2020 மேஷம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் …