தினமும் ஒருவரை குறி வைக்கும் மீரா

தினமும் ஒருவரை குறி வைக்கும் மீரா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீரா, தினமும் ஒருவரை குறிவைத்து அவர்களிடம் சண்டை போட்டு அவர்களின் இமேஜை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முதலில் அபிராமி, பின்னர் வனிதா, அதன்பின் மதுமிதா, நேற்று லாஸ்லியா என ஒவ்வொருவரிடம் வம்பிழுத்து வந்த மீரா, இன்று சேரனிடம் வம்பு இழுக்கின்றார்.

‘நான் வேலை செய்யாமல் எஸ்கேப் ஆகுவதாக என்னை குறிப்பிட்டு நீங்கள் சொன்னீர்கள் என்று மீரா கூற அதற்கு சேரன் மன்னிப்பு கேட்டார்.

அதன்பின்னர் இனிமேல் உன்னை வேலை செய்ய வா’ என்று நான் கூப்பிட மாட்டேன், நீயாக வந்த வேலை செய்தால் நீ இந்த டீமில் இருக்கலாம் என்று சேரன் கூற உடனே நான் வேலையே செய்யாத பொண்ணு என்பதுபோல் கிரியேட் செய்ய வேண்டாம்’ என்று கூறிவிட்டு சேரனின் பதிலை கூட கேட்காமல் உடனே எழுந்து சென்றுவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் அமைதியாக இருக்கும் ஒருசிலரில் சேரனும் ஒருவர். ஆனால் அவரையே மீரா கோபப்படுத்திவிட்டார்.

வனிதாவின் கோபத்தில் கூட ஒரு வெகுளித்தனம் இருக்கும்.

ஆனால் மீரா திட்டமிட்டு, வேண்டுமென்றே ஒவ்வொருவரையும் டார்கெட் செய்து வருவதால் முதலில் வெளியேற்றப்படுபவர் மீராதான் என்று மக்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

https://www.facebook.com/VijayTelevision/videos/409471779664000/

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …