‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’

‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தமிழக அரசின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் அனுப்பியும் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என நளினி தரப்பில் வழக்கு தொடர்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதிட்ட நளினி தரப்பு 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

அப்போது தலையிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்தார்.

மேலும், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் சட்ட ஆலோசனை செய்து வருவதாக கூறினார்.

இதையடுத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …