9 மணி வரை
சத்யபிரதா சாஹூ

தமிழகத்தில் 5 மணி வரை 63.73 சதவீத வாக்குப்பதிவு – சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.08 சதவீதம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

இதற்கிடையே, மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

“ 5 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 55.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

கன்னியாகுமரியில் 100 பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. தமிழகத்தில் பெரிய வன்முறை நடந்ததாக தகவல் இல்லை.

2 அல்லது 3 இடங்களில் வேட்பாளர்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது. 6 மணிக்கு மேல் டோக்கன் வழங்கப்படும்” என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். #TNElections2019 #VoterTurnout

About அருள்

Check Also

திமுக

அடிச்சு தூக்கிய திமுக வாரிசுகள்: வெற்றி கோட்டையான சென்னை!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesதிமுக வாரிசுகள் மக்களவை தேர்தலில் சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளது. தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், …