பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி தெமட்டகொடை, மாவில உத்யான வீதியில் அமைந்துள்ள வீடமைப்புத் திட்டத்திற்கு அருகிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் பலியானவர்கள் பற்றியோ அல்லது படுகாயம் அடைந்தவர்கள் பற்றியோ எதுவித தகவலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.