திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை தபால் நிலைய வீதியை வசிப்பிடமாகக்கொண்ட தங்கதுரை தனுசன் (21 வயது) என்பவரே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக்காணிக்கு கொலையாளியும் குறித்த இளைஞனும் மோட்டார் வண்டியில் சென்றுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து குறித்த கொலையாளி கூரிய ஆயுதம் ஒன்றினால் இளைஞனின் கழுத்தில் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து காயப்பட்டவர் தான் தப்பித்துக்கொள்வதற்காக வெற்றுக்காணியிலிருந்து ஓடிச்சென்று கடற்படைத்தளத்திற்கு முன்பாக விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்றபோதே அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த கொலையின் சந்தேகநபர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.