பாலியல் தொந்தரவு

மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

புதுக்கோட்டை மாவட்டம் தேக்கட்டூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் தந்தையுடம் வசித்து வந்தார்.

இந்நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தந்தையே மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண்னின் தாயிற்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே தாயும் தந்தையும் தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் சகோதரியுடன் வசித்த தன் மகளை தனது ஊரில் நேர்த்திக் கடன் செலுத்த வேண்டும் என்று கூறி தந்தை கூட்டிச்சென்றுள்ளார்.

பின்னர் வீட்டில் மகளுக்கு தந்தை தினமும் பாலியல் தொந்தரவு தந்துள்ளார். இதனால் மனமுடைந்த அப்பெண் தன் சகோதரியின் வீட்டிற்கு வந்து வசிப்பதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் தன் வீட்டிற்கு வரவில்லை என்றால் கொன்று விடுவதாக தந்தை கொலை மிரட்டல் விடுப்பதாக இள பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …