உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 69 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலும், மேலும் 20 பேர் பயங்கரவாத விசாரணை பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.