பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்களுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு சாதாரணமாக கிடைத்து விடும்.
பெரும்பாலான போட்டியாளர்கள் தாங்கள் விரைவில் முன்னேற வேண்டும் என நினைத்து தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
அந்தவகையில் மூன்றாவது சீசனில் பங்கேற்று மக்களிடம் நல்ல பெயரை பெற்றவர்களுள் ஒருவர் தர்ஷன்.
மக்களின் ஒட்டு அதிக அளவில் பெற்று சக போட்டியாளர்களை விட ஒரு படி முன்னிலை வகித்து வந்த தர்ஷன் நேற்று பிக்பாஸில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய இரண்டே நாளில் தர்ஷனுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
Dear #Tharshan Finally your Game has come to an end, But ur Game in Kollywood will start on high note All the best from @LIBRAProduc @sathishmsk @rameshlaus @behindwoods @galattadotcom @igtamil @directorcheran @actress_sanam @cineulagam @itisprashanth #TharshanPeoplesChamp
— LIBRA Productions (@LIBRAProduc) September 29, 2019
ஆம், கவினை வைத்து நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தை தயாரித்த லிப்ரா ப்ரொடக்ஷன் தர்ஷனை வைத்து புது படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது.
எனவே கூடிய விலையில் இயக்குனர் , நடிகர்கள் லிஸ்ட் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்த தகவலை அறிந்த பிரபலங்ககள், தர்ஷன் ஆர்மிஸ், நண்பர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் திருமணம்? – யாருக்கு தெரியுமா?