உங்களை விரைவில் சந்திக்கிறேன் – தர்ஷன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் 3 சீசனில் ஏற்கெனவே முகென் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ள நிலையில் சாண்டி இறுதிச் சுற்றுக்குச் செல்லும் இரண்டாவது போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்த மீதமிருந்த தர்ஷன், ஷெரின், லாஸ்லியா அகியோர்களில் தர்ஷன் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்ட தர்ஷன் வெற்றிக்குத் தகுதியானவர் என்று உள்ளே இருக்கும் சகபோட்டியாளர்களே கூறிவந்த நிலையில் எதிர்பாராத விதமால தர்ஷன் வெளியேற்றப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நமக்கு பழக்கம் இல்லாதவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.

அதுபோல தான் நீங்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்புக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி. இந்த 98 நாட்களும் என்னை உங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து அன்பு காட்டியதற்கு நன்றி.

இது தான் என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசி. உங்களை விரைவில் சந்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்

இன்றைய ராசிப்பலன் 30 புரட்டாசி 2019 திங்கட்கிழமை

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …