தளபதி 64 படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மேடையில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா – மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பிகில் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.
இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விஜய் சேதுபதிக்கு படத்தின் கதை பிடித்திருப்பதால் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், தளபதி 64 படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக உள்ளதாகவும், நிச்சயம் பிளாக் பஸ்டர் படமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
https://twitter.com/Thalapathy64Off/status/1178199408564826112