‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளன.
பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தளபதி 64’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அனிருத் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
https://twitter.com/Thalapathy64Off/status/1181074980794073088
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் தன்னைக் காண குவிந்திருக்கும் ரசிகர்களைப் பார்த்து கை உயர்த்துகிறார் விஜய். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.