போலீஸ்

வனிதாவை கைது செய்ய தீவிரம் காட்டும் போலீஸ்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் உள்ள மிராமிதுனை போலீஸ் தேடி வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரான வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

வனிதாவுக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு
திருமணம் ஆகி, 2012ஆம் ஆண்டு விவாகரத்தும் ஆனது.

இவர்களுக்கு ஜோவிதா என்ற மகள் உண்டு.

ஜோவிதா தந்தையுடன் தெலுங்கானாவில் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜோவிதாவை வனிதா சென்னைக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து ஆனந்த்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வனிதா மீது ஆள் கடத்தல் வழக்கை தெலுங்கானா போலீசார் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது திடீரென தூசுதட்டி எடுக்கப்பட்டு வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கானா போலீசார் இதுகுறித்து சென்னை போலீசார் உதவியை கேட்டுள்ளதாகவும், இதனையடுத்து வனிதா எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …