பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் நான் தான் என்று காரணங்களுடன் சேரன் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.
100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.
கமல் ஹாசன் தொகுத்து வழக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்குகளில் எந்த போட்டியாளர் அதிக புள்ளிகளை பெறுகிறாரோ அவரே இறுதிப்போட்டிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
https://www.facebook.com/VijayTelevision/videos/385413939051325/
மேலும் நேற்று நடைபெற்ற போட்டிகளில் தர்ஷன் அதிக புள்ளிகளை பெற்று தற்போது முதலிடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் 86-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் சேரன் தான் இந்த போட்டியில் கலந்து கொள்வதாக நண்பர்களிடம் கூறிய போது அவர் இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் நீ எதற்கு செல்கிறார் என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.
தொடர்ந்து இந்த போட்டியில் எல்லாருக்கும் ஆர்மிகள் இருக்கும் அந்த ஆர்மியில் உள்ள அனைவருமே தன்னை ஃபாலோ செய்வார்கள் அதனால் தனக்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக சேரன் தனது நண்பர்களிடம் கூறியதாக தெரிவித்தார்.