தமிழிசை
தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பாசிச பாஜக இல்ல, பாசமான பாஜக: தூத்துக்குடியில் தமிழிசை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தூத்துக்குடி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள தமிழிசை பாஜக கட்சியானது பாசிச பாஜக இல்லை, பாசமான பாஜக என கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது.

அதன்படி தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இதற்கிடையே பாஜக என்பது பாசிச கட்சி என்று மக்கள் மனதில் ஒரு பரவலான கருத்து இருந்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இதுகுறித்து பேசிய தமிழிசை பாஜக கட்சி பாசிச பாஜக இல்லை, பாசமான பாஜக, தூத்துக்குடி மக்கள் எனக்கு பேராதரவு தருவார்கள்.

மேலும் தூத்துக்குடியில் பாஜக ஸ்ட்ராங்காக இருப்பதால் நான் எளிதில் வெற்றியடைவேன் என அவர் கூறினார்.

About அருள்

Check Also

திமுக

அடிச்சு தூக்கிய திமுக வாரிசுகள்: வெற்றி கோட்டையான சென்னை!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesதிமுக வாரிசுகள் மக்களவை தேர்தலில் சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளது. தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், …