தமிழிசை

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தமிழிசை ஆறுதல்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டியின் குடும்த்தினரைச் சந்தித்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆறுதல் தெரிவித்துள்ளார்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சம்ஷா பாத் நரசய்யாபள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் விஜயம்மா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களில் பிரியங்கா கால்நடை மருத்துவராகவும், பவ்யா விமானநிலைய ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பிய பிரியங்கா அன்று மாலை கால்நடை ஒன்றுக்கு அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வீட்டில் கூறிவிட்டு தனது மொபட்டில் புறப்பட்டு சென்றார்.

இரவு 9 மணி வரை பிரியங்கா வீடு விரும்பவில்லை. பிரியங்கா வீடு திரும்பாதது பற்றியும், தொலைபேசியில் அவர் கூறிய விஷயங்களையும் அவருடைய குடும்பத்தார் மாதாப்பூர் காவல் நிலையத்தில் கூறி புகார் அளித்தனர். 

வேலை விஷயமாக வெளியில் சென்று வீடு திரும்பாத டாக்டர் பிரியங்காவை போலீசார் அன்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர்.

அதனையடுத்து, ரங்காரெட்டியில் உள்ள மேம்பாலம் ஒன்றின் கீழ் இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடக்கிறது என்று சாய் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் பிரியங்கா குடும்பத்தாரை வரவழைத்து அந்த உடலை காண்பித்தனர். பிரியங்கா குடும்பத்தார் அது பிரியங்கா என்று உறுதி செய்தனர்.

https://twitter.com/DrTamilisaiGuv/status/1200774643688169472

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/jvqRLMYl_P4

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …