தமிழிசை
தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பாஜகவில் இருந்து விலகினார் தமிழிசை செளந்திரராஜன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை செளந்திரராஜன் அதுமட்டுமின்றி பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகினார்.

தமிழக பாஜக தலைவராகவும் பாஜகவின் முக்கிய தலைவராகவும் விளங்கிய தமிழிசை செளந்திரராஜன் இன்று காலை தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

ஒரு மாநிலத்தின் கவர்னர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவராக இருக்க வேண்டும் என்ற் நிலையில் தமிழிசை செளந்திரராஜன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ததோடு, பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார்.

இந்த நிலையில் தமிழிசை செளந்திரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமனம் செய்யப்பட்டதற்கு அவரது தந்தையும் காங்கிரஸ் பிரமுகருமான குமரி அனந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவில் தமிழிசையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …