அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. எனவே சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இன்று அந்தமான் கடற்பகுதிக்கும் நாளை, நாளை மறுதினம் மத்திய …
Read More »தண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்
விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகம் விரைவில் உருவாகும் என்று தெரிவித்தார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க, குடிமராமத்து பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், திமுகவிற்கு வாக்களிப்பதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் அவர் …
Read More »மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐத் தாண்டியது
உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இமாச்சலம், உத்தரக்கண்ட், பஞ்சாப், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் கடந்த வாரம் கனமழை பெய்ததால் பிரயாக்ராஜ், வாரணாசி ஆகிய நகரங்களில் கங்கை ஆற்றங்கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் …
Read More »5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான 5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச நிலையத்தை நிறுவி ஆராய்ச்சி செய்து வருகின்றன. சுழற்சி முறையில் அங்கு வீரர்கள் தங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான பொருட்கள், விண்கலன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான …
Read More »