கிருஷ்ணகிரியில் பிகில் படம் வெளியாக தாமதமானதால் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி. ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்திற்கான சிறப்பு காட்சிகள் 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில தொழில்நுட்ப காரணங்களால் பல திரையரங்குகளில் ஒரு மணிநேரம் தாமதமாகவே காட்சிகள் தொடங்கின. இப்படியாக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கிலும் …
Read More »ரஜினிக்கு முதல்வர் ஆசைக்காட்டி வலைவிரிக்கிறதா பாஜக கூட்டணி?
”அதிமுக, பாஜக கூட்டணியுடன் ரஜினி ஆட்சியை பிடிப்பார்” என அதிமுகவில் இணைந்த ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார். திமுக கட்சியில் தொடர்ந்து இருந்து வந்த நடிகர் ராதாரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து அவரை தங்கள் கட்சியோடு கூட்டணி சேர்க்க பாஜக முயன்று வருகிறது. தற்போது பாஜக மற்றும் …
Read More »தமிழ்நாட்டையே இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்கள் – சீமான் பேச்சு
மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டையே இரண்டாக பிரித்தாலும் பிரிக்கலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “காஷ்மீரை போல தமிழகத்தையும் இரண்டு துண்டாக பிரித்தாலும் பிரிப்பார்காள். …
Read More »காவிரி தண்ணீர் கடலில்தான் கலக்கப் போகிறது – வைகோ ஆதங்கம்
சென்ற வருடம் முக்கொம்பில் உடைந்த அணையை சரி செய்யாததால் தற்போது காவிரிக்கு வரும் நீர் வீணாக கடலில்தான் கலக்க போகிறது என வைகோ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் திருச்சி அருகே உள்ள முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது. அந்த அணை 1836ல் வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்டது என்பதால் புதிய அணை ஒன்றை கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் அந்த பணிகள் …
Read More »அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே..! ரஜினிக்கு ஆன்மீக வகுப்பெடுத்த கே.எஸ்.அழகிரி
அமித்ஷாவையும், மோடியையும் அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணராக பாவித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். நேற்று சென்னையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்திற்கான வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் அமித்ஷா, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் விவகாரத்தில் பாஜக எடுத்த முடிவுக்கு தனது வாழ்த்துக்களை கூறியதுடன், …
Read More »இப்போ தண்ணி தருவீங்க எப்போதும் தருவீங்களா?
20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்கள் மூலமாக தமிழகத்திற்கு அனுப்புவதாக கேரளா கூறியுள்ள நிலையில் “தினமும் 20 லட்சம் லிட்டர் தருவீர்களா?” என கேட்டு கடிதம் எழுதப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து கலந்தாலோசிக்க இன்று தமிழக சட்டசபை கூடியது. அதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “ தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 4 …
Read More »ஒரே நேரத்தில் இரண்டு கல்யாணம்
ஈரோடு தாராபுரம் அருகே வாலிபர் ஒருவர் மீது இரண்டு பெண்கள் ஆசைப்பட்டதால் இருவரையுமே அவர் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது ஆட்டோ டிரைவர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க விதவை பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அவர்களது நட்பு பின்னாளில் காதலாக மலர்ந்துள்ளது. அதேசமயம் அந்த ஆட்டோ டிரைவருக்கு 19 …
Read More »