மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை (21) காலை ஆராதனையின் போது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இதுவரையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் அமைந்துள்ள பகுதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காணப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்கப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் காயப்பட்டவர்களுக்கு தீசிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை …
Read More »சற்றுமுன்னர் , தெகிவளையில் மற்றுமொரு குண்டுவெடிப்பு.
நாட்டில் இன்று காலை இடம்பெற்ற தொடர்ச்சியான 6 குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, 7 ஆவது வெடிப்பு சம்பவமொன்று தெஹிவளை பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி குறித்த வெடிப்பு சம்பவமானது தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இதேவேளை பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மிருகக் காட்சிசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »இலங்கையில் குண்டுவெடிப்பு,160 பேர் பலி,பலர் படுகாயம்
இலங்கையில் குண்டுவெடிப்பு,160 பேர் பலி,பலர் படுகாயம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த …
Read More »தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வெடி குண்டு மீட்பு!!
மன்னம்பிட்டி பொலன்னறுவை பகுதியில் தனியாருக்கு செந்தமான காணியில் மண் அகழ்வின் போது வெடி குண்டு இனங்காணப்பட்டது. குறித்த வெடி பொருளில் தமிழ் எழுத்துக்கள் “கொல்பவன் வெல்வான் -தயாரிப்பு தாயகத்தமிழ் ஈழம்“ என பொறிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகிறது. இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து குண்டு மீட்கப்பட்டது.
Read More »