இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், கோத்தபய ராஜபக்ச முன்னிலை பெற்றுள்ளார். இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச-வுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா-வுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய …
Read More »150 ஏக்கர் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கவுள்ள இராணுவம்..!
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி இன்று (18) விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. படையினர் வசமிருந்த காணிகளில் விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இன்று காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப் படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் பல்வேறு …
Read More »இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே
இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச நிறுவனத்தின் 23-வது மாநாடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமுத்திர பிராந்தியத்தில் பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் காணப்படுவதாக கூறினார். இலங்கையை பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன்படி, கண்டி – அம்பாந்தோட்டை, குருணாகலை – திருகோணமலை …
Read More »உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி
கிளிநொச்சி – முருகன்டி பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அதிவேகத்தில் பயணித்துள்ள உந்துருளி பேருந்து ஒன்றுடன் மோதுண்டு நேற்றைய தினம் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மாங்குளம் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Read More »கடவுச்சீட்டு கட்டணத்தில் இன்று முதல் மாற்றங்கள்
கடவுச்சீட்டுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் இன்று முதல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. குடிவரவு குடியகழ்வு திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, பொதுவான கடவுச்சீட்டுக்கான கட்டணம் 3000 ரூபாவில் இருந்து 3500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. ஒரு நாள் சேவையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூபா 10,000 இல் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் ரூபா 2000 இல் இருந்து ரூபா 2500 ஆக அதிகரிக்கப்படுகின்றது. ஒரே …
Read More »இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்
இலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்களில் மனித குண்டுகள் வெடித்ததில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் தரன்ஜித்சிங் சாந்து கண்டியில் 2 உயர் புத்த துறவிகளை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய …
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கைதான 78 பேரில் 20 பேர் நேரடி தொடர்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த 20 பேரிடமும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்களிடம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »இலங்கை தமிழ் குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
ஆஸ்திரேலியாவின் சட்டத்தை மீறி அகதிகளாக வந்த இலங்கை தமிழர் குடும்பத்தினரை வெளியேற்றும் அரசின் முடிவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்களே போராடி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடேஷ் மற்றும் பிரியா இலங்கையிலிருந்து அகதிகளாக 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியா தப்பி வந்து அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். தற்போது நான்கு வயது மற்றும் இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பிறகு …
Read More »வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்
வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் விசாரணை குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த அறிக்கை நாளைய தினம் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்
Read More »பயணிகளின்றி காட்சி தரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்…!
இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாளாந்தம் சுமார் 7 ஆயிரம் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர் எனவும், ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கும் குறைவான பயணிகளே வருகை தருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்கள் கறித்து வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு அச்சம் கொண்டுள்ளனர் எனவும் …
Read More »