ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர், கோலிவுட் பிரபலங்கள் , ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் ரஜினிகாந்த் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் மேடையில் பேசுகையில், ’என் மீது நம்பிக்கை வையுங்கள்’ என ரஜினி ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். அதைக் கேட்டு, அரங்கினுள் அமர்ந்திருந்த பலரும் சுவாரஸ்யமாக …
Read More »அதிமுகவுக்கு கன்னிவெடி வைத்து காத்திருக்கும் பாஜக?
உள்ளாட்சி தேர்தல் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் போட்டியிட பாஜக விரும்புகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக, அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அரசாணையை பிறப்பித்துள்ளது அதிமுக அரசு. இது ஆளும் கட்சிக்கு …
Read More »காசு திரும்ப வருமா… இல்ல கட்சி நிதினு லவட்டிருவாங்களா?
விருப்ப மனுக்காக கொடுத்த காசு திரும்ப கிடைக்குமா அல்ல கட்சி நிதியாகிவிடுமா என்ற சந்தேகத்தில் தேமுதிகவினர் உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் தரப்பில் விருப்ப …
Read More »உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் – திமுக அறிவிப்பு
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், விருப்ப மனு அளிக்க அக்கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு , துணைப்பொதுச்செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 65 மாவட்டச்செயலாளர்களும் பங்கேற்றனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக …
Read More »