Tag Archives: Ethiopia

சோமாலியா வரைபடத்தில் காணாமல் போனது எப்படி?

சோமாலியா

எத்தியோப்பியா வெளியிட்ட வரைபடத்தில் சோமாலியா காணாமல் போனது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாங்கள் தயாரித்த வரைபடத்தில் பக்கத்து நாடான சோமாலியாவை தங்கள் நாட்டோடு சேர்த்து கொண்டதற்காக எத்தியோப்பியா வெளியுறவுத் துறை அமைச்சகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்காக ஓர் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது அந்நாடு. அந்த வரைப்படத்தில், சோமாலியா இல்லாத அதே நேரம், உலகம் அங்கீகரிக்காத சோமாலிலாண்ட் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

இறுதி சடங்குக்கு கருகிய மண் ஒப்படைப்பு

இறுதி

எத்தியோப்பியாவில், மார்ச் 10 அன்று நடந்த விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருகிய மண் மட்டும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 157 பேரின் உடல் எச்சங்களை அடையாளம் கண்டுபிடிக்க குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்படவுள்ள அந்த மண், அவர்களுக்கான கல்லறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் புதைக்கப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தங்கள் உறவினரை இழந்த ஒவ்வொரு …

Read More »