ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில், இன்று காலை சுமார் 6 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளி 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள், ஈரான் நாட்டிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »இலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு
மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 3.55-தாக சிறிய நில அதிர்வே பதிவாகியள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார். இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, ஹல்துமுல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை எந்தவிதமான சேதங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். …
Read More »