விருப்ப மனுக்காக கொடுத்த காசு திரும்ப கிடைக்குமா அல்ல கட்சி நிதியாகிவிடுமா என்ற சந்தேகத்தில் தேமுதிகவினர் உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் தரப்பில் விருப்ப …
Read More »40 தொகுதிகளிலும் நமக்கே வெற்றி வீடியோ வெளியிட்ட
தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட்டரில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளதால் தொண்டர்கள் குதூகலத்தில் உள்ளனர். நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேரன்பு கொண்ட பெரியோர்களே தாய்மார்களே, என் உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களே, நாம் முரசு சின்னத்தில் 4 தொகுதிகளில் போட்டிபோடுகிறோம். மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து எங்களை 40 தொகுதியிலும் வெற்றி பெற செய்யவேண்டும் என இருகரம் …
Read More »தேமுதிக வேட்பாளர் சுதீஷின் சொத்து மதிப்பு
அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின் போது சுதீஷின் சொத்து மதிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதவாது, கடந்த 5 ஆண்டுகளில் சுதீஷின் அசையும் சொத்துகளின் மதிப்பு 336% வரை அதிகரித்துள்ளது. அதேபோல் மொத்த சொத்து 77% அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் சேலம் மக்களவை தேர்தலில் தேமுதிக …
Read More »அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி
மக்களவை தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தேமுக தலைவர் விஜயகாந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திடார். இந்த ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் தேமுதிக, அதிமுக வேட்பாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு அளிக்கவும் ஒப்புக்கொண்டது. திமுக கூட்டணியில் கதவு அடைக்கப்பட்டதாலும், தனித்து நின்றால் டெபாசிட் கூட தேறாது என்பதாலும், பிரேமலதாவின் முதிர்ச்சியற்ற …
Read More »உறுதியான அதிமுக – தேமுதிக கூட்டணி?
அதிமுக தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் தேமுதிகவின் கூட்டணி முடிவு தான் இழுபறியில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி இன்று மாலை 6 மணிக்கு …
Read More »அதிமுக கூட்டணியில் இணைகிறது தேமுதிக! 4 தொகுதிகள் என தகவல்
அதிமுக குறித்தும், ஜெயலலிதா குறித்தும் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனம் செய்ததால், தேமுதிகவை அதிமுக தனது கூட்டணியில் சேர்க்காது என்றே கருதப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாகவும், அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. தே.மு.தி.க.வுக்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது முன்னதாக அதிமுகவில் …
Read More »தேமுதிகவை சீண்டிய கமல்ஹாசன்? ஒரே பேட்டியால் கொந்தளிப்பு
வாரிசு அரசியலை எல்லாம் நான் செய்யமாட்டேன் என கமல்ஹாசன் கூறியது திமுக மற்றும் தேமுதிகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்காக அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதியும், பாமகவிற்கு 7 தொகுதியும் ஒதுக்கியுள்ளது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் 20 தொகுதிகளில் திமுகவும் நிற்க உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட தொகுதி உடன்பாடுகளை முடிந்துவிட்ட நிலையில் …
Read More »தேமுதிகவுக்கு எச்சரிக்கை விடுத்த வைகோ : அன்று நண்பன் இன்று ?
துரைமுருகன் மற்றும் தேமுதிக எல் கே சுதீஷ் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் வைத்த குற்றச்சாட்டுகளால் தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக சூடுபிடித்து வருகிறது. நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் தேமுதிக சார்பில் எங்களிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறி பரபரப்புகளைக் கிளப்பினார். ஆனால் அதே சமயத்தில் தேமுதிக அதிமுகவோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்ததாகக விமர்சனம் எழுந்தது. ஆனால் துரைமுருகனின் …
Read More »விஜயகாந்த் – ரஜினி, ஸ்டாலின் சந்திப்பில் அரசியல்… போட்டுடைத்த பிரேமலதா
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகத்தை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு… வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 3-வது அணி கிடையாது. தேமுதிக பலத்துக்கு தகுந்தாற் போல் தொகுதிகள் வேண்டும். விஜயகாந்தின் நலம் குறித்து விசாரித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் விஜயகாந்தை …
Read More »