புல்புல் புயல் மேற்கு வங்காளத்தை கடலோரத்தை ஒட்டி கரையை கடந்த நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருபெற்றது. அந்த புயலுக்கு “புல்புல்” என பெயரிடப்பட்டது. இந்த புயல் மணிக்கு 130 முதல் 140 கி.மீ.வேகத்தில் வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய கடலோர பகுதிகளை ஒட்டி புயல் கரையை கடந்தது. இதனால் அப்பகுதிகளில் …
Read More »நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த அறிவிப்பு!
அரபிக் கடலில் ஒரே சமயத்தில் கியார் மற்றும் மகா ஆகிய இரு புயல்கள் நிலைகொண்டுள்ள நிலையில் மகா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இரண்டு புயல்கள் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒருசில மாவட்டங்களுக்கு கடந்த செவ்வாய் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கனமழை காரணமாக …
Read More »20 வருடங்கள் கழித்து புயலின் பிடியில் குஜராத்? – ”வாயு” புயல் ஒரு பார்வை
அரபிக்கடலில் மையம் கொண்ட வாயு புயலானது நாளை குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெராவலிலிருந்து துவாரகாவுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது புயலின் வேகம் மணி நேரத்திற்கு 150 கி.மீ முதல் 180கி.மீ வரை இருக்கிறது. இது கரையை கடக்கும்போது …
Read More »வருகிறது ஃபானி புயல் – வானிலை மையம் எச்சரிக்கை !
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் புயல் ஒன்று கரையைக் கடக்க இருப்பதாகவும் அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் …
Read More »