Tag Archives: யாழ்ப்பாணம்

யாழ் விமான நிலைய திறப்பு விழா 17ம் திகதி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17ம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. எனினும் சென்னைக்கான விமான சேவைகள் எதிர்வரும் 27ம் திகதி முதல் வழமையான பயணத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 17ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் …

Read More »

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள விமானம்

Jaffna International Airport

எயர் இந்­தியா விமான நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மான அலையன்ஸ் எயர் நிறு­வ­னத்தின் விமானம், எதிர்­வரும் 14 ஆம் திகதி பலாலி விமான நிலை­யத்தில் முத­லா­வ­தாக தரை­யி­றங்­க­வுள்­ள­தாக, சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையம் எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள பலாலி விமான நிலைய புன­ர­மைப்பு பணிகள் நிறை­வு­கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலையில், இதன் திறப்பு விழாவின் அடை­யா­ள­மா­கவே, அலையன்ஸ் எயர் விமானம் தரை­யி­றங்­க­வுள்­ளது. சென்­னையில் இருந்து வரும் முதல் …

Read More »

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானம்

யாழ்

இன்று முதல் கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அந்த ஒன்றியத்தால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனரின் வழக்கு விசாரணைகளை நிறைவுறுத்தல் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த கற்றல் செயற்பாடு புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது. இந்த கற்றல் செயற்பாடு …

Read More »

இதயத்தின் மௌனராகம்

இதயத்தின் மௌனராகம்

” இதயத்தின் மௌனராகம்….” இமைகள் மூடாமலே இதயம் சேராமலே இன்னுயிர் தேடியே இதயம் தடுமாறுவதேனோ….. இசைக்கும் குயிலே இசைத்திடு அனுதினமும் இரவினால் அவளும் இரவினை வாட்டுவதேனோ…… இதயக் குழியிலே இதமான வேளையிலே இசை ராகத்தோடு இதயம் துடிக்கிறதேனோ…… இதய அறையிலே இதயத் துடிப்பிலே இசைக்கின்ற என்னையே இம்சை செய்வதேனோ…… இறக்கைகள் இன்றிய இன்னிசை இராகமே இனியவள் நினைவிலே இமைக்காமல் துடிப்பதேனோ…… இமயமலை நீரிலே இசைத்திடும் நதியிலே இயல்பாக என்னையும் இரசிக்க …

Read More »

யாழ் . பல்கலைக்கழக உப வேந்தர் பதவி நீக்கம்

யாழ்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடிதமொன்று கிடைத்துள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் , இது குறித்து எமது செய்திச் சேவை மேற்படி உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் அவர்களுக்கு தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு வினவியிருந்தது. எனினும் , அவ்வாறான எந்த கடிதமும் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார். சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்று …

Read More »

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி.. மேலும் ஒருவர் படுகாயம்

யாழில்

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வேன் ரக வாகனம் ஒன்றும், துவிச்சக்கரவண்டியொன்றும் மோதி நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த 49 வயதான அதே பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். துவிசக்கரவண்டியை செலுத்தியவர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். இதேவேளை, சிலாபம் கொழும்பு பிரதான …

Read More »

யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை!

யாழ்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் …

Read More »

யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம்

இராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றிரவு உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினரால் நேற்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. …

Read More »

யாழில் கண்காணிப்பு தீவிரம்

யாழில் கண்காணிப்பு தீவிரம்

யாழ்.மத்திய பஸ் நிலையம் உட்பட்ட பல பகுதிகளில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பஸ் நிலையத்திற்கு செல்லும் சந்தேகத்திற்கு இடமானவர்களை அதிரடி படையினர் விசாரணை செய்வதுடன் , சந்தேகத்திற்கு இடமான பொதிகளையும் பரிசோதனை செய்கின்றார்கள். இதேவேளை யாழ்.புறநகர் பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் , மற்றும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் என்பவற்றுக்கு அருகிலும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். LIVE UPDATES : குண்டுவெடிப்பு …

Read More »

யாழ்ப்பாண பொலிஸாரின் அறிவுறுத்தல்!

யாழ்ப்பாணம்

பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார். அறிமுகமற்றவர் உங்கள் பிரதேசத்தில் நடமாடினால் அவரை யார்? என முதலில் விசாரியுங்கள். அதற்கு அவர் மாறுபட்ட தகவல்களை வழங்கினால் பொலிஸ் அவசர பிரிவு இலக்கம் 119 மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவலை வழங்குங்கள் என்றும் …

Read More »