Tag Archives: மைத்திரிபால சிறிசேன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை – ஜனாதிபதி மீண்டும் தெரிவிப்பு!

ஜனாதிபதியை

கடந்த ஏப்ரல் 8ம் திகதி சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளின் கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக வௌியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தனக்கு அவ்வாறு எவ்வித அறிவிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Read More »

ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள்

ஜனாதிபதியை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலருக்கும் இடையே நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள பல பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலைகள் மற்றும் பணி இடங்களுக்கு வரும் வேளையில் பயன்படுத்தும் ஆடைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் …

Read More »

ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து

ஜனாதிபதி

இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாதுகாப்பு பிரிவினால் பயங்கரவாதத்தினை அழித்து ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ரொய்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதல் தொடர்பில் வெளியான செய்தி..

Read More »

எனது நாட்டை விட்டுவிடுங்கள்- ஐஎஸ் அமைப்பிற்கு சிறிசேன

எனது நாட்டை விட்டுவிடுங்கள்

இலங்கையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடொன்றை சேர்ந்த சூத்திரதாரியிருக்கலாம் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார் ஸ்கை நியுசிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்ற செய்தியை ஐஎஸ் அமைப்பிற்கு தெரிவிக்கவிரும்புவதாகவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஐஎஸ் அமைப்பிற்கு என்னிடம் ஒரு செய்தியுள்ளது எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்பதே எனது அந்த செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐஎஸ் அமைப்பு சிறியநாடுகளை இலக்குவைக்கும் தந்திரோபாயத்தை பின்பற்ற …

Read More »

தீவிரவாதிகளை நிச்சயம் தோல்வியுற செய்வேன் – ஜனாதிபதி சூளுரை

அடிப்படைவாத தீவிரவாதிகள்

தீவிரவாதிகளை நிச்சயம் தோல்வியடைய செய்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் வர்த்தகர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா தொழில்துறையுடன் தொடர்புடைய வணிகம், விருந்தகம் உள்ளிட்ட சில துறைகளை சார்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர். சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் எங்கே?

Read More »

தேசிய தவ்ஹீத் அமைப்பை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை – ஜனாதிபதி

ஜனாதிபதி

தேசிய தவ்ஹித் ஜமாத்தை தடை செய்வதற்கு அவசியமான சட்டத்திட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகப்பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார். தற்போது இலங்கை சட்டத்திட்டங்களின்படி, தேசிய தவ்ஹீத் அமைப்பை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. இந்த நிலையில் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு அந்த அமைப்பை தடை செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு மறுதினமே இந்த …

Read More »