கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி இன்று (18) விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. படையினர் வசமிருந்த காணிகளில் விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இன்று காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப் படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் பல்வேறு …
Read More »உந்துருளியில் பயணித்த இளைஞா் பேருந்தில் மோதி பலி
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவா் உயிரிழந்துள்ளாா். நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பேருந்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணி புரிகின்ற குறித்த இளைஞர், ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடித்து மீண்டும் …
Read More »பெண்கள் உட்பட ஐவர் காயம்…
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நேற்று இரவு, வீடொன்றுக்குள் வீடு புகுந்து, வாள் வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை குறித்த குழுவினர் களவாடி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Read More »விடுதலைப் புலிகளின் சீருடையுடன் கூடிய எலும்புக்கூடு மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணி
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 681வது படை தலைமையகத்துக்கு அருகில் உள்ள காணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்ட இடத்தில், நீதிமன்ற அனுமதியுடன் தற்போது அகழ்வுப் பணி இடம்பெற்று வருவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் இந்த பணி இடம்பெற்று வருகின்றது. அங்கு தடயவியல் பிரிவினரும் பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 17ஆம் திகதி …
Read More »தீவிர பாதுகாப்பிற்குள் கண்ணகி அம்மன் உற்சவம்! !
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம் இன்று நடைபெறும் நிலையில் சுமார் ஆயிரம் வரையான பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இராணுவத்தினரும் ஆலயத்திற்குள்நுழையக்கூடிய அனைத்து பாதைகளிலும் ஆலயத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்ட்ருக்குள் சுமார் 3 இடங்களுக்கு குறையாது வீதி தடைகளை ஏற்படுத்தி சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு ஆலய வளாகத்தை சூழவும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு ஆலய …
Read More »முல்லைத்தீவு சுயாதீன ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது!
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடந்த 07.04.2019 அன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது மக்களையும், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் புகைப்படமெடுத்து அச்சுறுத்திய கடற்படையினரின் செயற்பாட்டை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் நேற்று முந்தினம் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும் விசாரணைகள் எதுமின்றி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர் றே்றைய தினமும் அழைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்ட்ட …
Read More »