Tag Archives: புறக்கோட்டை

வெடி குண்டுகளை தயார் செய்த தொழிற்சாலை இதுவா? படங்கள்

உயிர்த்த ஞாயிறான கடந்த 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்களுக்கு வெடி குண்டுகள் தயார் செய்யப்பட்ட தொழிற்சாலை தொடர்பான புகைப்படங்களை டெய்லி மெய்ல் செய்தி சேவை வெளியிட்டுள்ளது. வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள செப்பு தொழிசாலையிலேயே குறித்த தாக்குதல்களுக்கான வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த தொழிற்சாலையில் கடமையாற்றிய முகாமையாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, …

Read More »

மற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது!!

மற்றுமொரு

புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளியொன்று பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட உந்துருளியை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் குறித்த உந்துருளியை இவ்வாறு வெடிக்க வைத்துள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த உந்துருளி சோதனையிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே குறித்த உந்துருளி பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். …

Read More »

சந்தேகத்திற்கிடமான இரு உந்துருளிகள் பரிசோதனையில்

மேலும் இருவர் கைது

காவல்துறை தலைமையகத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும், புறக்கோட்டை – முதலாம் குறுக்கு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய காவல்துறை அதிகாரிகள் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Read More »