இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச நிறுவனத்தின் 23-வது மாநாடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமுத்திர பிராந்தியத்தில் பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் காணப்படுவதாக கூறினார். இலங்கையை பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன்படி, கண்டி – அம்பாந்தோட்டை, குருணாகலை – திருகோணமலை …
Read More »ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு
இலங்கையில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இதன்போது நடப்பு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளில் இருந்து மீண்டும் வழமைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆரயப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை , பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக சிங்கப்பூர் நோக்கி இன்று மதியம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More »இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை விலக்கிக்கொள்ளுமாறு பிரதமர் கோரிக்கை
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை இன்று அலரி மாளிகையில் சந்தித்தபோது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். நாட்டில் நிலைமை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Read More »நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்கள்
குருநாகல் மற்றும் கம்பஹா பகுதிகளில் நேற்று இடம்பெற்ற அமைதியற்ற நிலைமையை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் அலரி மாளிகை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், காவற்துறை மா அதிபர், முப்படைகளின் கூட்டு பிரதானி ஆகியோர் கலந்துகொண்டனர். அசம்பாவிதங்கள் நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இராணுவம் உள்ளிட்ட முப்படை …
Read More »ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுப்பட்டது – பிரதமர்
நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் என்பவற்றை சிதைப்பதற்கு, ஐ.எஸ்.அமைப்பினருக்கு இடமளிக்கமுடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – மல்வல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுப்பட்டது. ஐ.எஸ் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான உயிர்களை காவு கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முதல் இலக்காகும். அதனை தொடர்ந்து …
Read More »புர்க்கா ஆடைக்கு தடை – பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு
வௌிநாட்டு தீவிரவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்படும் இலங்கையர்கள் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்வதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பிரதமர் இதனை தெரிவித்தார். இதேவேளை , புர்க்கா பயன்பாட்டை தடை செய்வதற்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்ததாக பரவும் செய்தியில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அந்த …
Read More »திட்டமிட்ட வெடிச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் – பிரதமர்
நாட்டில் பல்வேறுபட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களினால் இறந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன். இந்த வெடிச்சம்பவங்களுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை அசாதாரண சூழ்நிலையில் நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையாக செயற்பட வேண்டும். நாடுபூராகவும் இடம்பெற்ற திட்டமிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டணை பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கான அதிகாரங்கள் பாதுகாப்பு அனுசரனைகள் …
Read More »