அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் வடதுருவ பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை பெரும் நிலநடுக்கம் உண்டானது. ரிக்டர் அளவில் 6.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. என்றாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையும் பாருங்க : …
Read More »ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில், இன்று காலை சுமார் 6 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளி 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள், ஈரான் நாட்டிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
ஜப்பானின் யமகட்டா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உண்டாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஜப்பானில் உள்ள யமாகாட்டா மாகானத்தில் ரிக்டர் 6.5 அளவிற்கு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் யமகாட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. கடந்த 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட …
Read More »நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் …மக்கள் அதிர்ச்சி
நியூசிலாந்து நாட்டில் இன்று காலையில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அந்நாட்டு அரசு அறிவிப்பை வாபஸ் பெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நியூஸிலாந்து நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கெர்மெடிக் தீவு என்ற இடத்தில் இருந்து …
Read More »பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – 16 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 81 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 6.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட கட்டட இடிபாளுகளுக்குள் 30 பேரளவில் சிக்கியிருக்கலாம் என்றும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கையில்
Read More »தைவானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று உள்ளூர் நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஹுயாலியன் நகரில் இருந்து 10 …
Read More »