Tag Archives: தமிழக அரசு

சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக ஆன்லைனில் மாற்றலாம்

தமிழக அரசு

சர்க்கரைக்கான குடும்ப அட்டையை அரிசிக்கான குடும்ப அட்டையாக ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்க்கரைக்கான குடும்ப அட்டையை அரிசிக்கான குடும்ப அட்டையாக மாற்ற விரும்புபவர்களின் வசதிக்காக, அவற்றை ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி, சர்க்கரைக்கான குடும்ப அட்டையை மாற்ற விரும்புவோர் குடும்ப அட்டையின் நகலை இணைத்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இன்று முதல் வரும் 26 ஆம் …

Read More »

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்த தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு

தமிழகத்தில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் லாபகரமானதாக இயங்க வழிவகுக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கடந்து 5 ஆண்டுகளாக தொடக்க நிலையிலேயே உள்ளதால், உறுப்பினர்களை அணிதிரட்டுதல், நிறுவன ஒத்திசைவு, நிதி ஆதாரம் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இச் சவால்களை எதிர்கொள்ளும் விதமாகவும், லாபகரமானதாக மாற்றவும் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு …

Read More »

5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்: தமிழக அரசு

தமிழக அரசு

தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண்குமார், தென்காசி ஆட்சியராக ஜிகே. அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், செங்கல்பட்டு ஆட்சியராக …

Read More »

காஷ்மீர் பேச்சின் எதிரொலியா? அரசு விருதை ஏன் புறக்கணித்தார் விஜய் சேதுபதி??

விஜய் சேதுபதி

காஷ்மீர் விவகாரத்தில் விஜய் சேதுபதியின் கருத்துக்கு ஆளும் கட்சியினரும் பாஜகவினரும் கண்டனம் தெரிவித்ததால் அரசு விருதை புறக்கணித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. 2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் வழங்கப்பட்டது. மொத்தம் 201 கலைஞர்கள் விருதுகளை …

Read More »

ஸ்டெர்லைட் ஆலை மூடல் – தமிழக அரசுக்கு முழு அதிகாரம் !

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆடையை மூடியது சம்மந்தப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு சார்பில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. …

Read More »

‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’

‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தமிழக அரசின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் அனுப்பியும் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என நளினி தரப்பில் வழக்கு தொடர்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட நளினி தரப்பு 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட …

Read More »