Tag Archives: ஜனாதிபதி

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் விசாரணை குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த அறிக்கை நாளைய தினம் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்

Read More »

சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்று கடிதம்!

சரத் பொன்சேகா

ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை சட்ட ஒழுங்குகள் அமைச்சராக நியமிக்க கோரி, ஐக்கிய தேசிய கட்சியின் 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த கடிதம் நேற்று நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் இன்று வரையில் 89 பேர் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து …

Read More »

ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து

ஜனாதிபதி

இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாதுகாப்பு பிரிவினால் பயங்கரவாதத்தினை அழித்து ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ரொய்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதல் தொடர்பில் வெளியான செய்தி..

Read More »

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை

ஜனாதிபதியிடம்

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நேற்ற கையளித்தார். குறித்த அறிக்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, குறித்த அறிக்கையை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் …

Read More »

பல்வேறு சந்திப்புகளை நடத்தி வரும் சிறப்பு தூதுவர்..

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவர் இலங்கையில் பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் தலைமையகம் அறிவித்துள்ளது. நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டது. இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து, ஐக்கிய நாடுகளின் நாகரீகங்களின் கூட்டணிக்கான விசேட உயர் பிரதிநிதி மிகுஏல் ஏஞ்சல் மொரனினோஸ், இலங்கை வந்துள்ளார். அவர் நேற்று கொழும்பில் குண்டுதாக்குதல் நடத்தப்பட்ட …

Read More »

தீவிரவாதிகளை நிச்சயம் தோல்வியுற செய்வேன் – ஜனாதிபதி சூளுரை

அடிப்படைவாத தீவிரவாதிகள்

தீவிரவாதிகளை நிச்சயம் தோல்வியடைய செய்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் வர்த்தகர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா தொழில்துறையுடன் தொடர்புடைய வணிகம், விருந்தகம் உள்ளிட்ட சில துறைகளை சார்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர். சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் எங்கே?

Read More »

இரு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டது

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

தேசிய தௌஹீட் ஜமாத் மற்றும் ஜமாத்தி மில்லத்து இப்ராஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More »

தேசிய தவ்ஹீத் அமைப்பை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை – ஜனாதிபதி

ஜனாதிபதி

தேசிய தவ்ஹித் ஜமாத்தை தடை செய்வதற்கு அவசியமான சட்டத்திட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகப்பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார். தற்போது இலங்கை சட்டத்திட்டங்களின்படி, தேசிய தவ்ஹீத் அமைப்பை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. இந்த நிலையில் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு அந்த அமைப்பை தடை செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு மறுதினமே இந்த …

Read More »

அடிப்படைவாத தீவிரவாதிகள் 130 பேரை கைது செய்து, நாட்டிலிருந்து ஐ.எஸ் முற்றாக ஒழிக்கப்படும் – ஜனாதிபதி

அடிப்படைவாத தீவிரவாதிகள்

இடம்பெற்ற கோர சம்பவத்துக்கான பொறுப்பையும், புலனாய்வு பிரிவு பலவீனமடைந்தமைக்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பு பலவீனமடையச் செய்யப்படுகின்றமைக்கு எதிராக தாம் முன்னின்றமை காரணமாகவே, கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்துக்கும் தனக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், …

Read More »