எத்தியோப்பியா வெளியிட்ட வரைபடத்தில் சோமாலியா காணாமல் போனது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாங்கள் தயாரித்த வரைபடத்தில் பக்கத்து நாடான சோமாலியாவை தங்கள் நாட்டோடு சேர்த்து கொண்டதற்காக எத்தியோப்பியா வெளியுறவுத் துறை அமைச்சகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்காக ஓர் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது அந்நாடு. அந்த வரைப்படத்தில், சோமாலியா இல்லாத அதே நேரம், உலகம் அங்கீகரிக்காத சோமாலிலாண்ட் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 13 பேர் பலி
சோமாலியாவில் அமெரிக்க யுத்த வாநூர்தி மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புண்லண்ட் மாகாணத்தில் உள்ள கோலிஸ் மவுண்டனிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இதே பிரதேசத்தில் இடம்பெற்ற பிறிதொரு வான் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், புதிதாக தமது சட்டவிரோத குழுவிற்காக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை முன்னர் இணைத்து வந்ததாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். …
Read More »