பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கை தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தஜிகிஸ்தானில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல் பற்றி தான் மிகுந்த வேதனையுடன் நினைவுகூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். …
Read More »பெண்கள் உட்பட ஐவர் காயம்…
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நேற்று இரவு, வீடொன்றுக்குள் வீடு புகுந்து, வாள் வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை குறித்த குழுவினர் களவாடி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Read More »முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது
முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது. இந்த நிகழ்வுகள் இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் ஆரம்பித்தன. சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தநிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர் என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார். முள்ளிவாய்கால் நினைவு வாரம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12 திகதி முதல் …
Read More »