Tag Archives: கொழும்பு

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு பிரதானிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு வழிநடத்தல்களை மேற்கொண்ட மொஹமட் ஃபரூக் மொஹமட் ஃபவாஸை 72 மணி நேரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாழைத்தோட்டம் பகுதியில் அடுக்குமாடி வீடொன்றில் அவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார். இதன்போது அவரிடமிருந்து அந்த அமைப்பிற்கு சொந்தமான …

Read More »

கொழும்பில் 46 வாள்களுடன் ஒருவர் கைது

கொழும்பில்

கொழும்பு – கொம்பனி வீதியில் 46 வாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read More »

ஷங்ரில்லா குண்டுதாரிக்கு சொந்தமான தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது

ஷங்ரில்லா

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், கொழும்பு ஷங்ரில்லா விருந்தகத்தில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செப்பு தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கண்டியில், சந்தேகத்துக்குரிய மகிழுந்து ஒன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், குறித்த மகிழுந்தானது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் அக்கரைப்பற்றுக்கு சென்றதாகவும், எனினும், அன்றைய தினம் …

Read More »

கொழும்பில் 21 கைக்குண்டுகளுடன் மூவர் கைது

கொழும்பில்

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் மூன்று பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 10 பேர் சேர்ந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்தால் அது கட்சியா? நாஞ்சில் …

Read More »

சற்றுமுன்னர் பூகொடையில் வெடிப்பு சம்பவம்

வெடிப்பு சம்பவம்

பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நேற்று மாலை மற்றும் இரவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 16 பேர் சந்தேகத்தின் …

Read More »

வெடி குண்டுகளை தயார் செய்த தொழிற்சாலை இதுவா? படங்கள்

உயிர்த்த ஞாயிறான கடந்த 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்களுக்கு வெடி குண்டுகள் தயார் செய்யப்பட்ட தொழிற்சாலை தொடர்பான புகைப்படங்களை டெய்லி மெய்ல் செய்தி சேவை வெளியிட்டுள்ளது. வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள செப்பு தொழிசாலையிலேயே குறித்த தாக்குதல்களுக்கான வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த தொழிற்சாலையில் கடமையாற்றிய முகாமையாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, …

Read More »

தாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்

பயங்கரவாதி

தலைநகர் கொழும்பு உட்பட  நாட்டில் நடத்தப்ப்ட்ட  8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்?

Read More »

வெடிபொருட்களுடன் பாரவூர்தியொன்றும் வேன் ரக வாகனம் ஒன்றும் கொழும்பிற்குள்??

வெடிபொருட்களுடன்

வெடிபொருட்களுடன் பாரவூர்தியொன்றும், வேன் ரக வாகனம் ஒன்றும் வந்துள்ளதாக கிடைத்துள்ள தகவலுக்கு அமைய, அது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். வேன் ரக வாகனம்,பாரவூர்தி , கொழும்பு,காவல்துறை , ருவான் குணசேகர

Read More »

கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

ஜனாதிபதி

அண்மையில் குண்டுத்தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது அருட் தந்தை ஸ்ரீலால் பொன்சேக்காவை சந்தித்த ஜனாதிபதி, பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று தேவாலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, நிர்மாணப் பணிகளை மிக விரைவில் …

Read More »

தாக்குதல்கள் தொடர்பில் தற்போதுவரை 28 பேர் கைது ..

மேலும் இருவர் கைது

நாட்டின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்கதல்களில் தொடர்பில் தற்போதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 290 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின், சடலங்கள் தொடர்பான பிரேத, பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, சடலங்களை உறவினர்களிடம் கையளிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக …

Read More »