தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு, அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி,மாத்தறை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்குறிய வெட்டுப்புள்ளிகளாக 159(சிங்களம்), 154(தமிழ்) என …
Read More »ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த புரிந்துணர்வுடனும் புத்திசாதூரியத்துடனும் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும். அத்தோடு நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று …
Read More »போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது
கிரேண்பாஸ் – ஜோர்ஜ் வீதி பிரதேசத்தில் 3 ஆயிரத்து 950 ட்ரமடோல் போதை மாத்திரைகளினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டசுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடையவர் என்பதுடன், கொழும்பு 12 பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விஷேட ஆராதனைகள் .
ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விஷேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மற்றும் கலாச்சார கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் எட்மண்ட் திலகரத்ன அடிகளார் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இந்த ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு இந்த ஆராதனைகள் ஆரம்பமாகவுள்ளன.
Read More »பிரதமர் ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு
பிரதமர் ரணில் விக்ரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்தது. கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல இதனைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை பரிசீலிக்கப்பட்ட போது, அதற்கு அடிப்படை எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரதமர் தரப்பு சட்டத்தரணிகள், இந்த மனுவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான மூலாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதால், இது குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் …
Read More »காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை
காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் திறைசேரியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் ஊழல் ஒழிப்பு குழுவின் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு அமைவாக சாட்சி வழங்கவே அவர்கள் நீதிமன்றுக்கு …
Read More »பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை
நாளைய தினம் பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் வடக்கு பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை கிளிநொச்சியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவேளை, இன்று மாலை 1 மணி தொடக்கம் கொழும்பு பிரதேசங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளைய தினம் தீர்மானம்
Read More »பல்வேறு பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள்
சந்தேகத்துக்குரியவர்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன தொடர்பில் நேற்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய திக்வெல்ல – யோனகபுர பகுதியில் 2500 சிம் அட்டைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி கோட்டை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் ஈயத்தினாலான 669 சிறிய பந்துகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பலப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பழைய காவி உடைகள் உள்ளிட்ட …
Read More »வடக்கிற்கு மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம்….!
வடக்கிற் மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கொழும்பு நீர்கொழும்பு சம்மாந்துறை மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தீவிரவாதிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகையினால் நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வடக்கிற்கும் இராணுவ பாதுகாப்பு அவசியமாகின்றது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
Read More »தௌகீத் ஜமாத் அமைப்புக்கு காணி கொடுத்தார் கோட்டா!
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தௌஹீத் ஜமா அத் அமைப்பின் அலுவலகத்தை நிறுவக் காணி ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின துசார இந்துநில் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “நாட்டில் அடிப்படைவாதத்தைத் தோற்றுவிக்கக் கோட்டாபய ராஜபக்ச பல முயற்சிகளை மேற்கொண்டார். 241 ஏ, சிறி சத்தர்வ மாவத்தை, கொழும்பு …
Read More »