நாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டிசில்வா குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்தும் விடுதிகளில் தங்கியிருக்க முடியும் எனவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read More »தெமட்டகொடையில் குண்டுவெடிப்பு.
கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி தெமட்டகொடை, மாவில உத்யான வீதியில் அமைந்துள்ள வீடமைப்புத் திட்டத்திற்கு அருகிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச் சம்பவத்தில் பலியானவர்கள் பற்றியோ அல்லது படுகாயம் அடைந்தவர்கள் பற்றியோ எதுவித தகவலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »