Tag Archives: கிளிநொச்சி

கோத்தபய ராஜபக்சேவை புறக்கணித்த இலங்கைத் தமிழர்கள்

தமிழர்கள்

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச பெற்றுள்ள வெற்றி, அந்நாட்டு அரசியல் மற்றும் இந்தியாவுடனான உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம் இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றுள்ளார். இலங்கையின் இரும்பு மனிதர் என்று சிங்களர்களால் அழைக்கப்படும் இவர் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப்போரை முன்னின்று நடத்தியவர். இதனாலே இந்தத் தேர்தலில், தமிழர்கள் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணி …

Read More »

150 ஏக்கர் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கவுள்ள இராணுவம்..!

கிளிநொச்சி

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி இன்று (18) விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. படையினர் வசமிருந்த காணிகளில் விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இன்று காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப் படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் பல்வேறு …

Read More »

யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது

யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது – கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிவரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிராந்திய அலுவலக திறப்புக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிதிநிதிகள் எவரும் துணைக்நிற்க கூடாது என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார். இன்று 22-08-2019 கிளிநொச்சியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்ற …

Read More »

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக இன்று மீட்பு

கிளிநொச்சி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்தே இன்று காலை இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். விஷ்ணுகாந்தி வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிபத் தாயாரும், அவரது மகனான விஷ்ணுகாந்தி லிங்கேஷ்வரன் (வயது 34) என்ற இளைஞருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரினதும் உடல்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றபடியால் அவர்கள் நேற்றிரவு அல்லது இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் …

Read More »

உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி

உந்துருளி

கிளிநொச்சி – முருகன்டி பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அதிவேகத்தில் பயணித்துள்ள உந்துருளி பேருந்து ஒன்றுடன் மோதுண்டு நேற்றைய தினம் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மாங்குளம் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Read More »

கிளிநொச்சியில் இன்று மாலை வாள்வெட்டுக் கும்பல் அடாவடி

கிளிநொச்சியில்

கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 6 பெண்களும், 3 ஆண்களும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடுகள் இரத்தத்தால் தோய்ந்து காணப்படுகின்றன. பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வாள்களுடன் வந்த 15 இற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளுக்குள் …

Read More »

பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை

பாடசாலைகளில்

நாளைய தினம் பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் வடக்கு பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை கிளிநொச்சியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவேளை, இன்று மாலை 1 மணி தொடக்கம் கொழும்பு பிரதேசங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளைய தினம் தீர்மானம்

Read More »

புலனாய்வுத்துறையின் பெயரில் கிளிநொச்சில் துண்டுப் பிரசுரங்கள்!

புலனாய்வுத்துறை

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை மற்றும் புலனாய்வுத்துறையின் பெயரில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கிளிநொச்சியின் பல இடங்களில் வீசப்பட்டுள்ளன. தமிழ் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தமிழ் – முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இடம்பெற்றது என அத்துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு முன்னாள் போராளிகளின் உதவியை 512 படைகளின் தளபதி கேட்டிருப்பது படையினரின் புலனாய்வுத் துறையின் இயலாத்தன்மையை வெளிக்காட்டுகின்றது எனவும் …

Read More »

கிளிநொச்சியில் ஆர்.பி.ஜி செல்கள் மீட்பு

ஆர்.பி.ஜி செல்கள்

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 2009 க்கு முற்பட்ட காலப்பகுதிக்குரிய ஆர்.பி.ஜி செல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வெடிப்பொருட்கள் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் ஆர்.பி.ஜி செல்களை மீட்டுள்ளனர். தாக்குதல்கள் தொடர்பில் தற்போதுவரை 28 பேர் கைது ..

Read More »

மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவர் பலி

மின்னலால்

முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடிப் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கியத்தில் 17 வயதான மாணவன் ஒருவர் பலியானத்தோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். மாலை வேளை மழை பெய்வதன் காரணமாக மழைக்காக வீதியின் ஓரத்தில் இருந்த நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கிய சமயம் மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் மரத்தின் கீழ் நின்ற இரண்டு மாணவர்களில் ஒருவர் பலியானதோடு மற்றவர் காயமடைந்துள்ளார். இந்த மின்னல் தாக்குதலில் விசுவமடு மகா வித்தியாலயத்தில் …

Read More »