நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 2-ம் தேதி நடிகை மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. எனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி அரசு மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதனாலேயே தான் மும்பையில் குடியேறிவிட்டதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் வேறு மாநிலத்திற்கு …
Read More »சிங்கள மொழி சாட்சி பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சிங்கள மொழியில் இருந்த காவல்துறை அதிகாரியின் சாட்சியின் பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் பீற்றர் போல் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் வி.சுலக்சன், ந.கஜன் ஆகியோர் காங்கேசன்துறை வீதி கொக்குவில் குளப்பிட்டியில் வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் …
Read More »முன்னாள் போராளிகள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் – புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவிப்பு
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் தான் வவுணதீவில் காவல்துறையினரைக் கொலை செய்தனர் என கூறப்பட்டது ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என தெரிய வந்திருக்கின்றது. …
Read More »பயங்கரவாதிகளின் மேலும் ஒரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு முகாம் குருநாகல் – அலகோலதெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தெங்கு காணியொன்றில் இவ்வாறு அவர்கள் பயிற்சி முகாமை நடத்தி சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல்… இதுவரை 89 பேர் கைது
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 69 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலும், மேலும் 20 பேர் பயங்கரவாத விசாரணை பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறை ஊடகப் …
Read More »தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு பிரதானிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு வழிநடத்தல்களை மேற்கொண்ட மொஹமட் ஃபரூக் மொஹமட் ஃபவாஸை 72 மணி நேரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாழைத்தோட்டம் பகுதியில் அடுக்குமாடி வீடொன்றில் அவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார். இதன்போது அவரிடமிருந்து அந்த அமைப்பிற்கு சொந்தமான …
Read More »கொழும்பில் 46 வாள்களுடன் ஒருவர் கைது
கொழும்பு – கொம்பனி வீதியில் 46 வாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
Read More »வெடி குண்டுகளை தயார் செய்த தொழிற்சாலை இதுவா? படங்கள்
உயிர்த்த ஞாயிறான கடந்த 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்களுக்கு வெடி குண்டுகள் தயார் செய்யப்பட்ட தொழிற்சாலை தொடர்பான புகைப்படங்களை டெய்லி மெய்ல் செய்தி சேவை வெளியிட்டுள்ளது. வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள செப்பு தொழிசாலையிலேயே குறித்த தாக்குதல்களுக்கான வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த தொழிற்சாலையில் கடமையாற்றிய முகாமையாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, …
Read More »மற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது!!
புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளியொன்று பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட உந்துருளியை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் குறித்த உந்துருளியை இவ்வாறு வெடிக்க வைத்துள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த உந்துருளி சோதனையிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே குறித்த உந்துருளி பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். …
Read More »சந்தேகத்திற்கிடமான இரு உந்துருளிகள் பரிசோதனையில்
காவல்துறை தலைமையகத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும், புறக்கோட்டை – முதலாம் குறுக்கு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய காவல்துறை அதிகாரிகள் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
Read More »